பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நடந்தது. நவ., 22ல் துவங்கிய விழா தொடர்ந்து 8 நாட்கள் நடந்தது. தினமும் அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம், மாலை தீபாராதனை நடந்தது. சந்தனகாப்பு, தங்க கவசம் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.