உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில், நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா பாதுார் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் மேற்பார்வையில், ராஜா குருக்கள் தலைமையில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டி, யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள், வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். யாக குண்டத்தில் புடவைகள், வளையல்கள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.