பதிவு செய்த நாள்
01
டிச
2016
12:12
அவிநாசி: அவிநாசியிலுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், திருப்பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்யும் விழா, நடைபெற்றது. மேல்மருவத்தூரில், சுயம்பு வெளிப்பட்டு, 50ம் ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், அவிநாசியில் திருப்பாதுகை பட்டாபிஷேகம் நடந்தது. சக்தி கொடி ஏற்றம் மற்றும் கோபூஜையுடன் விழா துவங்கியது. ஹோம பூஜைகளுக்கு பின், திருப்பாதுகைகளுக்கு, திரவிய அபிஷேகம், சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 30 வகையான, 50 கிலோ மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. ஒன்பது புண்ணிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்களில் அபிஷேகமும் செய்யப்பட்டது. சஹஸ்ரதாரா அபிஷேகத்தை தொடர்ந்து, பாதுகைகளை சிம்மானத்தில் எழுத்தருள செய்து, செங்கோல், திரி சூலம் சமர்ப்பித்து, பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், 108 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்ட, மகா தீபாராதனை செய்யப்பட்டது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.