பதிவு செய்த நாள்
02
டிச
2016
03:12
முன்பே சொன்னதுபோல இதுவும் பல வகை காரணங்களுக்காக செய்யப்படும் தேசாச்சாரமே. சில கோயில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் ÷ வண்டுதல் நிறைவேறினால் அடுத்தமுறை வரும்போது, கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக் கொள்வது உண்டு. இந்த நம்பிக்கை சபரிமலைø யப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானது. மூன்றாவது யாத்திரை மிக புனிதமாகக் கருதப்படுவதற்குக் காரணம், அப்போதுதான் ஒரு மனிதன் முழு நிலை அடைகிறான். தெய்வத்தின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் தன்னுடைய மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்யமுடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையைக் காண்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம். அமாவாசை முடிந்து சந்திரன் மெதுவாக வளர்கிறது. இரண்டாம் நாள் சந்திரன் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் மூன்றாம் நாள் நமது கண்ணுக்கு புலப்படும். இந்த மூன்றாம் பிறையைக் காண்பதில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது. சூரியன் மறைந்த பின், மேற்கு வானத்தில், மேகமூட்டம் இல்லாமல் இருந்தால், ஒரு குறுகிய நேரம் மட்டுமே இதைக் காண முடியும். நமது மனதை ஆளும் கடவுள் சந்திரன், வளர்பிறை, தேய்பிறை போல நமது மனமும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டிருக்கும். மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, பகவானை பொன்னம்பல மேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும். ஆக, மூன்றாவது யாத்திரை முக்கி யமானது. பகவானின் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே, ஒருவரால் சபரி மலைக்கு மூன்றாவது முறை செல்ல முடியும். அதேபோல் மூன்றாம் முறையாக சபரிக்கு செல்பவர்களை மணிகண்டன், கொச்சு ஸ்வாமி என்று அழைப்பார்கள். இது அந்தந்த குழுவினரைச் சார்ந்ததே தவிர, கட்டாயம் கிடையாது.