Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3ம் முறை சபரி யாத்திரை செல்லும் ஐயப்ப ... கற்பூர ஆழியின் தாத்பரியம் என்ன? கற்பூர ஆழியின் தாத்பரியம் என்ன?
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரிமலை யாத்திரை வேண்டுதலும் வேண்டாமையும்!
எழுத்தின் அளவு:
சபரிமலை யாத்திரை வேண்டுதலும் வேண்டாமையும்!

பதிவு செய்த நாள்

12 டிச
2016
03:12

கார்த்திகை மாதம் பிறந்தாலே குதூகலம். பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! எனும்படி ஸர்வம் ஐயப்ப மயம்தான். ஆனால் ஐயப்ப விரதம், ஐயப்ப மயம்தான். ஆனால் ஐயப்ப விரதம், சாதாரண விஷயம் இல்லை. மாலை அணிந்து கொள்வதற்கும், அணிந்த பிறகும், மாலை கழற்றுவதற்கும், விரதம் இருப்பதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள்! முதலில் குரு சாமியை அடைந்து, மாலை அணிந்து, விரதம் சாமியை அடைந்து, மாலை அணிந்து, விரதம் துவங்க வேண்டும். தரையில் உறக்கம்; பகலில் உறங்கக்கூடாது. சூதாடுதல், படம் பார்த்தால், புகைப்பிடித்தல் போன்ற கேளிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்க் குளியல், சவரம் கூடாது. காலணிகள், குடை பயன்படுத்தக் கூடாது. கடும் பிரம்மசர்யம், வண்ண ஆடை உடுத்துதல்- இத்தனை கட்டுப்பாடுகளும் உண்டு.

இவற்றை முறையாகக் கடைபிடிக்க முடிகிறதா? ஆனாலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

மாலை அணிதல்: விரதம் ஆரம்பிக்கும் முன்னர் குலதெய்வம்/ இஷ்ட தெயவங்களை வணங்கிவிட்டு தாய், தந்தையரை வணங்க வேண்டும். நம்மை மலைக்கு அழைத்துச் செல்லப்போகும் குரு ஸ்வாமி கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். அவர் வேறு ஊரில் இருந்தால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வணங்கி, நம் வீட்டிலுள்ள தெய்வமான தாயை வணங்கி, அவர் கையால் மாலை அணிந்து கொள்ளலாம். சம்பந்தமில்லாத நபர்கள் மூலம் மாலை அணிவதை விட, இதுவே சிறந்த முறை.

மாலை - துணை மாலை: யாத்திரைக்கு உறுதியான கம்பியால் கட்டிய ஒரே ஓரு மாலை போதும். யாத்திரை துவங்கும் முன் மாலையை சரிபார்த்துக் கட்டிக்கொள்வது நலம். துணைமாலை- இணைமாலை எல்லாம் கட்டாயமில்லை. விரதத்தின் நடுவே மாலை அறுந்து விட்டால் - மனச்சஞ்சலம் கொள்ள வேண்டாம். ஐயப்பனிடம் சமஸ்தாபராதம் கேட்டு விட்டு, மீண்டும் குருநாதனின் கையால் மாலையை அணியலாம்.

குளியல்:  விரதக் காலங்களில் அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதுவே விதி. அதேசமயம், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆஸ்துமா போன்ற உடல் உபாதைகளுக்கு உட்பட்டவர்கள், கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், மிதமான சுடுதண்ணீரில் குளிப்பதால் தவறு இல்லை.

உணவுப்பழக்கம்: விரத காலம் முழுமையும் உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் இலகு காரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும். கூடுமானவரை வெளியே சமைத்த உணவைத் தவிர்ப்பதும் நலம். மருந்து உட்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு உட்பட்டவர்கள், அவர்கள் உடல்நிலைக்குத் தக்கவாறு உணவுப் பழக்கங்களை வைத்துக் கொள்வது நலம். மாலை அணிந்த பிறகு மருந்து, மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஐயப்பன் வழிபாட்டில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. தன்னைத்தானே வருத்திக் கொள்வது - நம்முள் விளங்கும் ஐயப்பனை வருத்துவதற்கு சமம்.

அன்னதானம்: கன்னி பூஜை, அன்னதானம் ஆகியவை மிகவும் சிறப்பான ஒன்று. விரதம் இருக்கும் ஐயப்பன்மார்கள் இதனைச் செய்வது பேரருளைப்  பெற்றுத் தரும். அதேசமயம் வசதி குறைவானவர்கள் கடன் வாங்கி இதனைச் செய்வதை ஐயப்பன் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டார். தங்கள் வசதி வாய்ப்புக்கு உட்பட்டுத்தான் இறைத் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஐயப்பன்மார்கள் நான்கைந்து பேர்கள் ஒன்று சேர்ந்து பூஜையும் அன்னதானமும் செய்தாலும் போதும். ஆடம்பரமான பூஜை அவசியமில்லை; பசித்திருக்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதும் அன்னதானம்தான். அலங்காரம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சுகாதாரத்துக்காக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை. விரத காலத்தில் காலணி அணிந்து கொள்வது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு காலணி அணிவதில் தவறில்லை. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ள நபர்கள் காலில் காயம் உண்டானால் எளிதில் ஆறுவதில்லை. சாலையில் உள்ள மண் உள்ளே புகுவதை விட, கண்டவரும் துப்பி வைத்துள்ள எச்சில் குப்பைகளை மிதிப்பதை விட செருப்பு அணிவதில் தவறு இல்லை. மிருகத் தோலினால் ஆன லெதர் செருப்புகளை தவிர்த்து, ரப்பர் அல்லது பிளாஸ்டிக் செருப்புகளைப் பயன்படுத்தலாம். இதே போலத்தான் தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டு ஷூ அணியலாம், இதில் குற்றம் எதுவும் இல்லை.

தாமதமாக மாலை அணிவது:
ஐயப்பனுக்காக மாலை அணிந்ததும், அந்த மாலையில் பகவானின் கணங்கள் குடியேறுகிறார்கள். எனவே, மாலையின் புனிதத் தன்மையைக் காக்க வேண்டும். இதில் சந்தேகம் உள்ளவர்கள், 41 நாட்கள் முறையாக விரதம் இருந்து விட்டு, பின்னர் மாலை அணியலாம். நியாயமான காரணங்களுக்காக இந்த விதிவிலக்கு உண்டு. பவித்ரமான மாலை தீட்டுப்படாமல் காக்கவே இந்த ஏற்பாடு.

டாக்டர் பணியில் உள்ள ஒருவர் அனுதினமும் எல்லா நோயாளிகளையும் தொட்டுத்தான் சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் ரத்தமும் படத்தான் செய்யும். சுடுகாட்டில் பணிபுரியும் ஒருவர், சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் நான் பிணங்களைத் தொட மாட்டேன் என்று கூற முடியுமா? ஆனால், கழுத்தில் மாலை இல்லையே ஒழிய, மற்றபடி விரதத்துக்குண்டான எல்லா நெறிகளையும் 41 நாட்களுக்கும் குறையாமல் கடைபிடித்தால், இந்த முறையில் பின்னாளில் மாலை அணிவதில் தவறில்லை.

செல்போன்: விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் இப்போது கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருமுடி கட்டிய பின்னர், சென்று வருகிறேன் என்றே கூறக் கூடாது எனும்போது கைப்பேசி எதற்கு? எல்லாவற்றையும் மறந்து ஐயப்பனை மட்டுமே நினைக்க இந்த யாத்திரை, அதிலும், கைப்பேசியைச் சுமந்து செல்வத்தைத் தவிர்த்தல் நலம். அவசரத்தேவைக்கும் தொடர்புக்கும் மட்டும் ஒரு குழுவில் ஒரே ஒருவர் மட்டும் கைப்பேசியை பயன்படுத்தலாம்.

மனிதத்தன்மை:
மாலை அணிந்து இருப்பவர்கள் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கக்கூடாது. தவிர்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் உடன் மாலையைக் கழற்றிவிட்டு துக்கத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு உதவுவதுதான் மனிதத் தன்மை. (இப்படிச் செய்யும் பட்சத்தில் மீண்டும் மாலை அணிந்து கொண்டால், மீண்டும் 41 நாட்கள் விரதத்தை முதலில் இருந்துதான் துவங்க வேண்டும்.) இதற்கு பயந்து கொண்டு, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவாமல் சபரிமலைக்கு சென்றால் ஐயப்பன் எப்படி நமக்கு அருள்பாலிப்பான்?

தென்னங்கன்று: 18 ஆண்டுகள் சபரிமலை செல்லக் கூடிய ஐயப்ப பக்தர்கள் தென்னங்கன்று எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவை, சபரிமலையில் நடப்படுவது இல்லை என்பதே நிதர்சன உண்மை. எனவே, 18ம் ஆண்டு சபரிமலை செல்லும் ஐயப்பமார்கள் இரு தென்னங்கன்றுகளை வாங்கி, ஒன்றை சபரிமலைக்கும், மற்றொன்றை சபரி மலைக்குச் செல்லக்கூடிய நாளில் அவர்கள் வீட்டிலோ அல்லது அவர்களது வீட்டுக்கு அருகிலோ நட்டு வைத்து அதனைப் பராமரித்து வளர்க்கலாம்.

இன்னும் சில: இருமுடிப் பை, போர்வை, மாலை ஆகியவைகளை வருடா வருடம் மாற்ற வேண்டும் என்ற தவறான எண்ணம் பல ஐயப்பன்மார்களிடத்து இருக்கிறது. அவற்றைச் சுத்தமாகப் பராமரிக்கும் பட்சத்தில் அவற்றை மறுமுறை உபயோகிப்பதில் தவேறதும் இல்லை. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவிப்பது கட்டாயம் அல்ல! மாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் மிதிபடுவது நல்லதல்ல. ஐயப்ப பக்தர்கள் மற்ற ஸ்தலங்களுக்கு வழிபட செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும், கட்டுப்பாட்டுகளையும் மதித்து நடத்தல் மிகவும் முக்கியமனாது. எல்லா இடத்திலும் சத்தம் போட்டு சரணம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று கிடையாது.

பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்தல் சிறப்பு. அதற்காகச் சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிவது பாபத்திலும் பெரிய பாபமாகும். ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைத்து நதி மாசுபடாமல் காக்க வேண்டும். நம் பங்குக்கு சபரிமலையைச் சுத்தப்படுத்தும் பணியும் செய்யலாம். பம்பையாற்றில் நீராடி விட்டு நம்முடைய மாலை, உடை போன்றவைகளை ஆற்றிலேயே விட்டு விடுவது மஹா பாபம். பம்பை ஆற்றில் விடவேண்டியது நம்முடைய  பாபங்களையும் தீய எண்ணங்களையும்தான். உடைகளை அல்ல! ஐயப்ப யாத்திரை அர்த்தமுள்ள யாத்திரை! வீணான குழப்பங்களை நீக்கி, யாத்திரை சென்று ஆனந்த சித்தனின் அருள் பெறுவோம்.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar