பதிவு செய்த நாள்
03
டிச
2016
03:12
தலைவாசல்: தலைவாசல் அருகே, பராமரிப்பின்றி கிடக்கும் சுவாமி சிலைகளை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தலைவாசல், ஆறகளுரில், காலபைரவர், பஞ்சபூத சிவன் கோவில் உள்ளது. அப்பகுதியில், சாதாரண விளைநிலங்களில் கூட, தொல்லியல் எச்சங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பழமையான சுவாமி சிலைகள், சாலையோரம் உள்ள குப்பைமேட்டில் கிடக்கின்றன. சமூக ஆர்வலர்கள் சிலர், அவற்றை கைப்பற்றி பராமரிக்கின்றனர். அதேநேரம், பல சிலைகள், சாலையில் கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.