பதிவு செய்த நாள்
03
டிச
2016
03:12
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஐயப்பன் சுவாமிக்கு, 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.
ஆத்தூர், கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில், ஐயப்பன் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ஐயப்ப சுவாமி பக்தர்கள் குழு சார்பில், டிச.,2 காலை, 9:00 மணியளவில், கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்கு பூஜை நடந்தது. பின், 108 வலம்புரி சங்குகளில் இருந்த மூலிகை நீரை கொண்டு ஐயப்பன் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணியளவில் நடந்த,
108 திருவிளக்கு பூஜையில், பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது, மூலவர் ஐயப்பன் சுவாமி வெள்ளி கவச அலங்காரத்திலும், உற்சவர் தங்க கவச அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கினர்.