அரூர்: அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. அரூர் சந்தைமேட்டில் வாணீஸ்வரி அம்பாள் உடனுறை வாணீஸ்வரர் சுவாமி கோவில் புனரமைக்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணி முடிவடைந்த நிலையில், கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 30ல் கோபூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, அரூர் டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.