பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
மோகனூர்: தொட்டிப்பட்டி ஆலமரத்து சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. மோகனூர் அடுத்த, தொட்டிப்பட்டியில், ஆலமரத்து சித்தி விநாயகர் கோவில் திருப்பணி முடிந்ததை அடுத்து, நேற்று முன்தினம், விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, யாக பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கோபுர கலசம், ஆலமரத்து சித்தி விநாயகர், செல்லாண்டி அம்மனுக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. சிறப்பு அலங்கரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.