பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
மல்லசமுத்திரம்: நல்லாகவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், சர்கார் மாமுண்டி கிராமம், நல்லாகவுண்டம் பாளையத்தில் விநாயகர், மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, கும்பாபிஷேகம் நடத்தும் விதத்தில், கடந்த, 4ல் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணியிலிருந்து, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், யாத்ராதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.