வெண்ணெய்மலை: கரூரில், பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலாக வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி முருகன் கோவில் அமைந்துள்ளது. வரும், 12ல், 42ம் ஆண்டாக படித்திருவிழா நடக்கிறது. அன்று காலை, 8:00 மணிக்கு பாலசுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம், 9:00 மணிக்கு மேல் சுவாமி கிரிவலம் வருதல், படி பூஜை ஆகியவை நடக்கிறது. அதன்பின், மீண்டும் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.