பதிவு செய்த நாள்
10
டிச
2016
12:12
குளித்தலை: மேட்டுமருதூர், பொம்மாநாயக்கன்பட்டி, பணிக்கம்பட்டி சந்தை உள்ளிட்ட இடங்களில், கும்பாபிஷேக விழா நடந்தது. குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் விநாயகர், முருகன் கோவில் கும்பாபிஷேகம் டிச.,9 நடந்தது. அதேபோல், கூடலூர் பஞ்., பொம்மாநாயக்கன்பட்டியில், விநாயகர், காளியம்மன், கன்னிமார், கருப்பசுவாமி
கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை, சோமரசம்பேட்டை வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் செய்தனர். இதேபோல், பணிக்கம்பட்டி சந்தையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.