ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனை எரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 10:12
ராமேஸ்வரம் : திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. திருக்கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு ராமேஸ்வரம் திருக்கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு சொக்க பனைகள் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் குருக்கள் மந்திரம் முழங்க அவை தீ வைத்து எரிக்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் புறப்பாடாகி வீதி உலா வந்தனர்.