பதிவு செய்த நாள்
14
டிச
2016
11:12
கோபி: கோபி அருகே கணக்கம்பாளையம், பெருந்தேவி தாயார் சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ராமானுஜர் 1,000 வது ஆண்டு விழா மற்றும் கொங்கு நாட்டு மக்களுக்கு, நன்றி தெரிவிக்கும் விழா, நேற்று துவங்கியது. இதையொட்டி நித்திய பூஜை, ஸ்ரீரங்கம் கோவில் அத்யாபகவர்களின் திவ்ய பிரபந்தகம் சேவாகாலம், உபன்யாச விழா நடந்தது. நிகழ்ச்சியில் ராமானுஜரின் பிரதிநிதிகளான ஜீயர்களுக்கு, பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜீயர்கள் மற்றும் ஆசார்யர்கள் மங்களாசாசனம், கொங்கு நாட்டு மக்கள், 15 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.