பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையில், செல்லாத ரூ. 1000 மற்றும் 500 நோட்டுகள் ரூ.7 லட்சம் இருந்தது. கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். தற்போது, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, 20 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்படுகிறது.கடந்த நவ., 18 ல் உண்டியல் காணிக்கை எண்ணிய போது, 17 லட்சத்து 19 ஆயிரத்து 706 ரூபாய் காணிக்கை வசூல் ஆனது. அப்போது, செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிகவும் குறைவாக இருந்தது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள், 339ம், 500 ரூபாய் நோட்டுகள், 114 என, மொத்தமாக ஏழு லட்சத்து, 41 ஆயிரத்து, 654 ரூபாய் இருந்தன. இந்த பணத்தை காரமடை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கோவில் நிர்வாகம் செலுத்தியது.