பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவில், கிரிவலப்பாதை யில், 10 டன் குப்பை சேர்ந்துள்ளன. இதை அகற்றும் பணியில், 750 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த, 12ல் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்கள், 13ல் பவுர்ணமி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். தீப திருவிழா மற்றும் பவுர்ணமி தினத்தில், பக்தர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடை பகுதிகளில் கரும்பு சக்கை, மக்காச்சோள கழிவு, அன்னதானம் வழங்கப்பட்ட இலைகள், தட்டுகள் போன்றவற்றால், 10 டன் குப்பை சேர்ந்தது. இதை அகற்ற, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, செய்யாறு, ஆரணி நகராட்சி ஊழியர்கள், வேலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் என, 750 பேர் வந்துள்ளனர். வர்கள், கடந்த, இரண்டு நாட்களாக குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.