திருவாடானை, செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் போடலாம். இதுகுறித்து தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன் கூறியதாவது: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் 3 மாதத்திற்கு ஒரு தடவை உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. எனவே செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் போடலாம். இவை அன்னதானம் மற்றும் கோயில் வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படும், என்றார்.