ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை பட்டணிந்து ஆண்டாள் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2016 11:12
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு திருப்பாவை பட்டணிந்து காட்சியளித்த ஆண்டாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர். இதையொட்டி நேற்று அதிகாலை 2:30 மணிக்கு நடைதிறக்கபட்டு ஆண்டாளுக்கு திருப்பாவை பட்டணிந்து சிறப்பு பூஜைகளை, கோவிந்தச்சாரி பட்டர் செய்தார். அரையர் பாலமுகுந்தன் திருப்பாவை பாடலை பாடினார். திவ்யதம்பதிகளான ஆண்டாள், ரெங்கமன்னாரை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, வேதபிரான் அனந்தராமகிருஷ்ணன் பட்டர், சுதர்சன் பட்டர், ஸ்தானிகம் ரமேஷ், மணியம் ஸ்ரீராம் மற்றும் கோயில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றார்.