பதிவு செய்த நாள்
17
டிச
2016
01:12
சேலம்: மார்கழி பிறப்பையொட்டி, மாவட்டத்தில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜை நேற்று நடந்தது. மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, நேற்று, சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், அதிகாலை பூஜை, 4:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, திருப்பாவை சாத்துபடி நடந்தது. பின், ராஜஅலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், ராஜ அலங்காரத்தில் அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், கோட்டை மாரியம்மன், சேலம் சுகவனேஸ்வரர், ராஜகணபதி, டவுன் ஐயப்பன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள், உடையாப்பட்டி முருகன், கந்தாஸ்ரமம், பேர்லேண்ட்ஸ் முருகன், சின்னதிருப்பதி பெருமாள், சூரமங்கலம் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, இம்மாத இறுதிவரை, தினமும் சிறப்பு பூஜை நடக்கும்.