ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 02:12
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு நேற்று லட்சார்ச்சனை நடந்தது. காலபைரவர் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவாச்சாரியார்கள் வேதமந்தரங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த செல்லதுரை, பாலு மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.