Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மஹா தீப கொப்பரைக்கு ... கிறிஸ்மஸ் விழா: பாம்பன் சர்ச்சில் பனிக்குடில் கிறிஸ்மஸ் விழா: பாம்பன் சர்ச்சில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவம் விழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவம் விழா

பதிவு செய்த நாள்

24 டிச
2016
04:12

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடைரோடு சிவன்புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கடந்த மாதம், 16ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஐயப்பனுக்கு சிறப்பு புஷ்பாபிேஷக பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. 10ம் தேதி, 108 கூடைகளில் மலர்களை கொண்டு ஐயப்ப சுவாமிக்கு மகா புஷ்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடும், கொடியேற்றமும், ஐயப்ப சேவா சமிதியின், 57 ம் ஆண்டு விழாவும், உற்சவ பலி சிறப்பு பூஜையும், பள்ளிவேட்டையும் நடந்தது. 22 ம் தேதி காலை ஆறாட்டும், கொடிக்கல்பறையும் நடந்தது. அதன் பின்னர் ஐயப்ப சுவாமிக்கு, 25 கலசங்களால் கலசாபிேஷகம், களபாபிேஷகம் மற்றும் சிறப்பு பஞ்ச வாத்யம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

மாலையில் பவானி ஆற்றின் கரை அருகேவுள்ள மைதானம் மாரியம்மன் கோவிலிருந்து அலங்காரிக்கப்பட்ட தாமரை ரதத்தில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் துவங்கியது. எம்.எல்.ஏ., சின்னராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறுவர், சிறுமிகள், பெண்கள் கையில் தீபம் ஏந்தியபடி, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பஜனைக் குழுவினர் பாடல் பாடிச் சென்றனர்.  ஊர்வலம் கோவிலை அடைந்ததும் வான வேடிக்கை நடந்தது. பின்பு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 26ம் தேதி மண்டல பூஜை, 41 ம் நாள் விழாவும், பட்டி மன்றமும், 31ம் தேதி பஜனையும், 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும், 14 ம் தேதி மகரஜோதி திருநாள் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதி தலைவர் அச்சுதன் குட்டி மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar