Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோவில்களில் உழவாரப்பணி கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப சுவாமி திருவீதியுலா
எழுத்தின் அளவு:
ஐயப்ப சுவாமி திருவீதியுலா

பதிவு செய்த நாள்

26 டிச
2016
12:12

திருப்பூர்: ஐம்பெரும் விழாவையொட்டி, ஐயப்ப சுவாமி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு சார்பில், 21ம் ஆண்டு ஐம்பெரும் விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. ஐயப்பசுவாமி ஊர்வலம், மேளதாளம் மற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. நேற்று கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின்  ரத ஊர்வலம் துவங்கியது. மங்கலம் ரோடு பழக்குடோன் வழியாக, பாரப்பாளையம் பிரிவை சென்றடைந்தது. ஊர்வலத்தில்,  சிங்காரி மேளம், செண்டை மேளம் இடம் பெற்றது.  பாரப்பாளையம் பிரிவு அருகே, புதிய பச்சை பந்தல் அமைத்து, அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது ஐயப்பன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் உற்சவமூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து வழிபாடு நடக்க உள்ளது. இன்று மாலை, 108 திருவிளக்குபூஜையும், ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனையும் நடைபெற உள்ளது.

நாளை மாலை, 5:30 மணிக்கு, சங்கத்தமிழ் அமைப்பு சார்பில், பக்தி இலக்கியங்களில் கருத்துக்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கவா? படித்து மகிழவா? என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு, ஐயப்பன் மகா கன்னிசாமி பூஜையும், கலசபூஜையும், கூட்டு பஜனையுடன் நடைபெற உள்ளது. வரும், 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சங்க கொடியேற்றும் நிகழ்ச்சியும், காலை, 10:00 மணிக்கு அன்னதான பூஜையும் நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் அன்னதானம் நடைபெறும். பள்ளி குழந்தைகளுக்கு நல உதவி வழங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar