மந்திரங்களும் சொல்லிப்பார்க்கிறேன், கோயில்களுக்கும் போய் பார்க்கிறேன். ஆனாலும் கஷ்டம்... கஷ்டம்.. கஷ்டம்.. என்ன செய்யலாம்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2011 04:10
அதெல்லாம் சரி...வேலைக்கு போகிறீர்களா! தினமும் 150 ரூபாய் சம்பளம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன். இரண்டு கிலோ ரேஷன் அரிசி இரண்டு ரூபாய் தான். நாற்பது ரூபாய்க்கு காய், மளிகை சாமான், எட்டு ரூபாய்க்கு கால் லிட்டர் பால், எரிபொருள் பத்து ரூபாய், இதர செலவு இருபது ரூபாய்...கூட்டிப் பாருங்க! 80 ரூபாய் போக மிச்சம் 70 ரூபாய் இருக்கு. ஆயிரம் ரூபாய் வாடகை போக மீதி 1100 ரூபாய் இருக்கு. சேர்த்து வையுங்க! கிட்டத்தட்ட 13 ஆயிரம் மிச்சம். துணிமணி, மருத்துவம் என சுகமாக வாழலாம். நன்றாக உழையுங்க! வருமானத்துக்குள் பட்ஜெட் போடுங்க! பிறகு மந்திரம் சொல்லுங்க! கேபிள் டிவி, ஏசி, பிரிட்ஜ் என நினைத்தால் தான் கஷ்டம் சாமி!