கருவுற்ற பெண் 7 மாதமான பிறகு குலதெய்வம் கோயிலுக்குப் போகக் கூடாது என்கிறார்கள். சரிதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2011 04:10
பெண்ணின் வயிற்றில் யாரும் இடித்து விடக்கூடாது. போக்குவரத்து பிரச்னை இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து தான் கோயிலுக்கு மட்டுமல்ல, தூரத்தில்உள்ள வேறெங்கும் போக வேண்டாமென சீமந்தம் முடித்து பெற்றவர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். அங்கே தாய் அவளை வீட்டு வேலைகளைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவாள். வேலை செய்வது குழந்தை பிறப்பை எளிமையாக்கும். இதற்காகத்தான்...மற்றபடி வேறு காரணமில்லை. போக்குவரத்து அதிகமில்லாத உள்ளூர் கோயிலுக்கு மாலை வேளையில் நடந்தே போய்வரலாம். தவறில்லை.