புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் கவர்னர் கிரண்பேடி வழிபட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன. கவர்னர் கிரண்பேடி, அரியாங்குப்பம் தூய மரியன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். தொடர்ந்து, வில்லியனூர் லுார்து மாதா ஆலயத்துக்கு சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலி, பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.ஆலய திருகுளத்தை கவர்னர் சுற்றி வந்து வழிபட்டார்.