பதிவு செய்த நாள்
27
டிச
2016
01:12
பவானி: அய்யப்பன் மண்டல பூஜை, பவானி யில் நடந்தது. பவானி, காவேரி வீதியில் உள்ள அரிமா சங்கத்தில், அய்யப்பன் மண்டல பூஜை நேற்று நடந்தது. பக்த சரணாலயத்தின் குருசாமி ஐயப்பதாசன் (எ) கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதை தொடர்ந்து, சபரிமலை பாரம்பரிய பூஜை முறைப்படி, அய்யப்ப சுவாமிக்கு, சுதுராசன பூஜை, தாலப்பொலி பூஜை, பாலிக்கிருத தேவன், தேவி பூஜை, 48 மண்டல விளக்குகள் கொண்டும், 18 கலசங்கள் கொண்டும் சிறப்பு மண்டல பூஜைகள் நடந்தன. பூஜைக்காக, 18 படிகள் மேல் விநாயகர், முருகன் மற்றும் அய்யப்பன் சுவாமி போட்டோக்கள் வைத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் பவானி, குமாரபாளையம் பகுதிகளை சேர்ந்த, பக்த சரணாலய பக்தர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.