கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா முன்னிட்டு, 108 சங்கு பூஜை மற்றும் புஷ்ப அலங்காரம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூர் அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா முன்னிட்டு, சுவாமிக்கு, 108 சங்குகள் வைத்து சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.