ஆர்.கே.பேட்டை : செவ்வாய்க்கிழமை யை ஒட்டி, விடியங்காடு, காசி விஸ்வநாதர் கோவிலில், அருள்பாலிக்கும் துர்க்கையம்மனுக்கு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.துர்க்கையம்மனுக்கு செவ்வாய்க் கிழமை களில், ராகு கால பூஜை நடக்கிறது. நேற்று, செவ்வாய்க் கிழமையை ஒட்டி, மாலை 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டனர்.