பதிவு செய்த நாள்
29
டிச
2016
11:12
திருப்பூர்: திருப்பூர் மண்ணரை, சக்தி நகர் ராஜகணபதி, பக்த ஆஞ்சநேயர், பாலமுருகன் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மார்கழி சிறப்பு பூஜையை தொடர்ந்து, நேற்று காலை, பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் ஸ்ரீ ராம ஜெபம், பஜனை பாடல்களை பாடினர். மதியம் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வேதபாராயணமும், ஆஞ்சநேயர் மகிமை என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது.
திருப்பூர் மாநகர தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில், அனுமன் ஜெயந்தி விழா, ஸ்ரீநகர் அம்ச விநாயகர் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு யாகம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமு, மாநகர செயலாளர் முருகபாண்டி, தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
திருப்பூர், முதலிபாளையம் கெங்கநாயக்கன்பாளையத்தில் மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ அனுமந்தராய சுவாமி திருக்கோவிலின், 17ம் ஆண்டு விழா மற்றும் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், ஸ்ரீ பஞ்ச ஷூக்தா ஹோமம், மூல மந்ந்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகா தீபாரதனை, ஆகியன நடைபெற்றது. அதன்பின், சிறப்பு அலங்காரம், மகா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது.