அழகர்கோவில், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் விழாக்களில் ஆடித் தேரோட்டம் முக்கியமானது.பழமையான தேர், கோயில் கோட்டை சுவரை சுற்றி உள்ள மண் ரோட்டில் வலம் வந்ததால், அதன் பாகங்கள் ஆட்டம் கண்டன. தேரின் சிற்பங்கள் சிதைந்தன. இதன்காரணமாக, 2014ல் கோயில் நிர்வாகம் புதிய தேரை வடிவமைத்தது. பக்தர்கள் தேரில் உள்ள சிற்பங்களின் அழகை கண்டு ரசிக்கும் வகையிலும் தேரைச் சுற்றி கண்ணாடி கூண்டுகள் அமைத்துள்ளனர்.