வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் கடந்த 3 நாட்களாக அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் முதல்நாள் சிறப்பு பூஜை, இரண்டாம் நாளில் பல்வேறு வகை அபிஷேகங்கள், தொடர்ந்து உற்சவர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அவருக்கு புஷ்ப அலங்காரம், மூலவருக்கு வடைமாலை அலங்காரம் நடந்தது. இறுதிநாளில் ஆஞ்சநேயருக்கு ஜெயமாருதி பக்த சபாவின் சார்பில் பஜனை வழிபாடு , சுவாமி வீதியுலாவும் நடந்தது. வத்திராயிருப்பு நடுஅக்ரஹாரம் சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 18 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சுவாமி ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு திவ்யநாம வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. டிரஸ்ட் செயலாளர் நாராயணன், பக்தர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.