புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் உள்ள கிரக சாந்தி கணபதிக்கு, புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. புத்தாண்டு தினத்தையொட்டி, மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ௫௪ அடி உயரமுள்ள, கிரக சாந்தி கணபதிக்கு சிதம்பரம் குருக்கள், கீதா சங்கர் குருக்கள், சீதாராம் குருக்கள் தலைமையில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. சோடசோபாசார பூஜை, அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனை நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.