அன்பின் உருவமாக திகழ்ந்த இயேசுகிறிஸ்து தனது சீடர்களை தன்னில் ஒருவராகவே நேசித்தார். அவர்களை தமது பிள்ளைகளாகவும், சகோதரராகவும், சிநேகிதர்களாகவும் கருதி அவர்களுக்கு உறவுக்காரராகவும், எல்லாமுமாகவும் இருந்தார். தன் சீடர்களை அவர் ஒவ்வொரு உறவு சொல்லி அழைத்தார். இதன் மூலம் இயேசு கிறிஸ்து, அவர்களை வழி நடத்திச் செல்லும் தந்தையாகவும், ஆலோசனை கூறும் சகோதரராகவும், இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் நண்பராகவும் இருந்ததை உணர்த்துகிறார். அவர் தனது சீடர்களை. சீஷர்கள் (யோவான் 13:35), சினேகிதர் (மத் 26:50), ஊழியக்காரர் (யோவான் 15:15), பிள்ளைகள் (யோவான் 21:15), சகோதரர் (மத் 28:10), சாத்தான் (மத் 16: 23), அப்போஸ்தலர்கள் (லுõக்கா 6: 13) என அழைத்துள்ளார். தனது மரணத்தைப் பற்றி இயேசுகிறிஸ்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, பேதுரு அவரிடம், “நீங்கள் இப்படி சொல்லலாமா?” எனக் கேட்டார். அப்போது அவரை நோக்கி சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், என்றார்.