Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சண்டையை நிறுத்தும் மருந்து! லிங்க வடிவ பெருமாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனக் கதவைத் திற! மகிழ்ச்சி வரட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
06:01

*அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் மனக்கதவு எப்போதும் திறந்திருக்கட்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் மகிழ்ச்சியை அது வரவழைக்கும்.
*நேர்மையால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுங்கள். கடவுளின் திருவடியில் வெற்றியைச் சமர்ப்பணம் செய்யுங்கள்.
*மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான் என உபநிடதம் கூறுகிறது. சுதந்திரமாக வாழ்வதற்கும், அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களே அடிப்படைக் காரணம்.
*பெற்றோரும், உறவினர்களும் செய்யும் உதவியைக் காட்டிலும், மனமே மனிதனுக்கு அதிக உதவியைச் செய்யும். அதைக் கொண்டு எண்ணத்தை சீர்படுத்தி உயர்நிலை அடைபவனே புத்திசாலி.
*மனம் தந்திர குணம் கொண்டது. நினைத்த உடனேயே எங்கு வேண்டுமானாலும் நம்மை இழுத்துச் செல்லும் சக்தி அதற்கு இருக்கிறது. எனவே, மனதை விழிப்புடன் கையாள வேண்டும்.
*மனம் அலை பாயும் தன்மை கொண்டது. ஆனால், அதை கடவுளுடன் தொடர்புபடுத்தி விட்டால், எல்லையில்லாத மகிழச்சியைப் பெறலாம் என்று கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
*எண்ணத்தைக் கட்டுப்படுத்தி, லட்சியத்தை நோக்கி செல்பவன் வாழ்வில் வளர்ச்சிஅடைகிறான். அதைக் கட்டுப்படுத்த தவறியவன் தாழ்ந்த நிலைக்கு ஆளாகி வீழ்கிறான்.
*தியானமே எல்லா ஆற்றலுக்கும் மூலமாகத் திகழ்கிறது. மனதை உள்முகமாகத் திருப்பி, உயர்ந்த லட்சியத்தை நோக்கி செலுத்துவதே உண்மையான தியானம்.
*வெளியுலகில் மனிதனுக்கு எத்தனை வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும், மன ஒருமைப்பாடு இல்லாவிட்டால் அந்த வாய்ப்புகளை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
*ஓய்வு பெறுவதற்காகத் தூங்கும் நிலையில், மனம் நாலாபுறமும் ஓடிக் கொண்டிருந்தால் மனிதனால் நிம்மதியாக தூங்கக் கூட முடியாது.
*மனதின் இயல்பு என்பது நம்மால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பழக்கத்தின் விளைவே. பலவீனமான மனம் படைத்தவனும் முயற்சித்தால் மனதை சீர்படுத்த முடியும்.
*நான் தூய்மையான மனம் படைத்தவன், நான் கடவுளின் பிள்ளை போன்ற நமக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து நினைப்பதோ, சொல்வதோ விரைவில் பலனைக் கொடுக்கும்.
*வாழ்வில் வெற்றி பெற்ற தருணங்களில், “எல்லாவற்றையும் எனக்கு அளித்த
ஆதிசக்தியே! நான் என்னும் அகங்காரம் உண்டாகாமல் என்னைப் பாதுகாப்பாயாக” என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
*ஆக்கப்பூர்வமான, உற்சாகம் தரும் நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் எதையும் பேசவோ, கேட்கவோ செய்யாமல் மவுனத்தில் ஆழ்ந்திருங்கள்.
*பிறர் உங்களை அவமதிக்கும் போது, அவர்களின் மூலம் பணிவு என்னும் பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். பழிக்குப் பழிவாங்க வேண்டும் என சிந்திக்காதீர்கள்.
*உண்மை என்னும் ஆயுதத்தை ஏந்திக் கொள்ளுங்கள். உண்மையே சிறந்த பாதுகாப்பு, அதுவே வெற்றிக்கான திறவுகோல். அதை விட ஆற்றல் மிக்க விஷயம் உலகில் வேறில்லை. பரமானந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar