உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு காப்பு கட்டும் வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2017 11:01
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜருக்கு ஜன., 10ல் சந்தனம் படி களைதலும், இரவு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. நேற்று இரவு 7:15 மணிக்கு கோயிலின் முகப்பில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அனுக்ஞை பூஜை நடந்தது. சன்னதியில் உள்ள தெய்வங்களுக்கும், சிவாச்சாரியார்கள், ஓதுவாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. 10ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் உற்சவர் மாணிக்கவாசகரின் உள்பிரகார திருவீதியுலா நடைபெறும். கல்தேர் மண்டபத்தில் உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.