ஈரோடு அருகிலுள்ள பாரியூர் ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் மூன்று திருக்கோலங்களில் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அவற்றில் யோக ஆஞ்சநேயரின் திருவடிக்கு அருகே மணி கட்டப்பட்ட வால் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. அனுமனின் வால்தரிசனமும் திருவடி தரிசனமும் ஒன்றுசேர காண்பது மிகுந்த யோகத்தை அளிக்கும் என்பது ஐதிகம்.