நாக்பூருக்கு அருகில் அடாபூல் என்ற ஊரில் மாபெரும் சாய்பாபா மந்திர் அமைந்துள்ளது. சலவைக்கல்லாலான இந்தக் கோயிலில் உள்ள பெரிய மண்டபத்தைச் சுற்றி ஆலமரங்கள் உள்ளன. அவற்றுள் ஒரு பெரிய மரத்தில் பிரமாண்டமான பொந்துக்குள் ஒரு சிவலிங்கமும் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அருகில் குத்துவிளக்கு எரிந்துகொண்டே இருக்கிறது. இங்கு தினமும் பூஜை நடைபெற்று வருகிறது. ஆலமரப் பொந்தே ஆலயமாகக் கொண்டு அருள்புரியும் ஈசனின் தரிசனம் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.