பதிவு செய்த நாள்
05
ஜன
2017
11:01
திருப்பூர்: திருப்பூர், அவிநாசியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருப்பூர், கருவம்பாளையம், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பொங் கல் விழா, நேற்று முன்தினம், அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங் கியது. நேற்று காலை, பக்தர்கள் ஊர்வலமாக சென்று, பால் குடம் எடுத்து வந்து, அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூவோடு எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. ராஜரா÷ ஜஸ்வரி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இன்று, பொங் கல் விழாவும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
அவிநாசி, கரையப்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் குண் டம் திருவிழா, கடந்த, 28ம் தேதி, பட்டத்தரசி அம்மன் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அம்மை அழைத்தல் மற்றும் குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:00 மணிக்கு, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. அரு ளாளர்கள் மற்றும் நுõற்றுக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, சித்தி விநாயகர் ÷ காவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் துவங்கி, மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலு த்தினர்.
· திருப்பூர், அவிநாசி ரோடு அம்மாபாளையத்தில் உள்ள விநாயகர், காமாட்சியம்மன், மாகாளியம்மன், கருப்பராயன், கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 27ம் தேதி, பூசாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கும்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்து, பெண்கள் பேரணியாக வந்தனர். தொடர்ந்து, நுõற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சாமிக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், நாளை மதியம், 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா; இரவு, 8:00 மணிக்கு, இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
செட்டிபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 1ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, விநாயகர் பொங்கல், அம்மன் கும்பம் கங்கைக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடைபெற்றன. பொங்கல் விழாவில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்து வருதல், தீபம் எடுத்து ஆடுதல் உள் ளிட்டவை நடைபெற் றன. நுõற்றுக்கு மேற் பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு அலகு குத்தி, தேர் வீதி உலா வந்தது. இரவு, 8:00 மணிக்கு அம்மன் கும்பம் கங்கைக்கு எடுத்து செல்லுதல் ஆகிய வைபவங்கள் நடந்தன.