பதிவு செய்த நாள்
07
ஜன
2017
03:01
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஜன.8 சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, டிச., 28 துவங்கி, ஜன., 6 வரை, தினமும் காலை, சிறப்பு அலங்காரம், மாலை அபிஷேக ஆராதனை நடந்தது. ஜன.7, மோகினி அலங்கார சேவையும், ஜன.8 அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு விழா மற்றும் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. 9ல், திருமால் சேவை மற்றும் அன்னதானம் நடக்கிறது. 16ல், வேடுபரி உற்சவம், 17ல் ஆழ்வார் மோட்சம், 18ல் இயற்பா சாற்றுமுறை, சொர்க்கவாசல் திருக்காப்பு உற்சவம் நடக்கிறது. 19ல், தேசிகர் சாற்றுமுறை, 20ல் தனிக்கோல் தாயார் அத்யேன உற்சவம் ஆகியவை நடக்கிறது.
மல்லூர், கோட்டைமேடு கோவிந்தராஜ பெருமாள், குட்டலாடம்பட்டி, கள்ளமலை வரதராஜ பெருமாள், சுனைகரடு வெங்கடேச பெருமாள், நத்தமேடு சென்னகேசவ சென்றாய பெருமாள், கோம்பைக்காடு சத்திய நாராயணன், தாசநாயக்கன்பட்டி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட
கோவில்களில், ஜன.6, சொர்க்கவாசல் திறக்க, ஏற்பாடு நடந்தது. ஜன.7 இரவு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. ஜன.8 அதிகாலை, கோமாதா பூஜை, சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.