பதிவு செய்த நாள்
09
ஜன
2017
11:01
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கோலகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், முதல் நாள் இரவிலிருந்து காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். திருப்பூரில் புகழ் பெற்ற ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும், சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு விழாவில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மோகினி அலங்காரம், ஸ்ரீ நாச்சியாளர் திருக்கோலம், திருவீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மகா அபிஷேகம் நடத்தப்
பட்டது.
காலை, 5:30 மணிக்கு, பரமபதவாசல் வழியாக, நம்பெருமாள் எழுந்தருளி, கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின், கருடவாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலாவாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி, நேற்று முன்தினம், இரவு, 11:00 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுவாமி தரிசனத்துக்கு வசதியாக, மூங்கில் கம்பு வரிசை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மொபைல் டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. விழாவில், பங்கேற்க பக்தர்களுக்கு, ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், 1.18 லட்சம் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன. காலை முதல் மாலை வரை, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில்,கேசரி வழங்கப்பட்டது. ண திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், திருப்பூர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு சொர்க்காவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பரம்பத வாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவில்வழியில் உள்ள பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் காலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு, கருட சேவை தரிசனம், தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. ண திருப்பூர் ராயபுரம், ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், காலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவிநாசி ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், பெருமாநல்லுõரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கோவில், கருவலுõர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கே.செட்டிபாளையத்தில் உள்ள செல்வ விநாயக பெருமாள், திருவரங்கன் ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், மொண்டிபாளையம், வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளிட்ட, திருப்பூர், அவிநாசி வட்டாரத்திலுள்ள பெருமாள் கோவில்களில், நேற்று வைகுண்ட ஏதாதசி விழா நடைபெற்றது.