செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவி லில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மூலவர் ரங்கநாதருக்கு தைலகாப்பு செய்தனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். 5.30 மணிக்கு ரங்கநாதர் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ரங்கநாதர் கிரிவல உலா நடந்தது. தாயா ருக்கும், ரங்கநாதருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதில் செஞ்சி அ.தி.மு.க., நகர செயலாளர் பிரித்விராஜ், கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன், மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கநா தன், தேர்திருப்பணிக்குழு குணசேகரன், ஏழுமலை, இளங்கீர்த்தி, ஸ்ரீராம் ரங்கராஜ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.