பதிவு செய்த நாள்
09
ஜன
2017
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வேணுகோபால் சுவாமி சன்னதியில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் முதல் பிரகாரத்தில், சுவாமி கருவறை நேர் பின்புறத்தில், வேணுகோபால் சுவாமி சன்னதி உள்ளது. இங்கு சுவாமியை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வைகுண்ட ஏதாதசி தினத்தன்று, தீபம் ஏற்றி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வேணுகோபால் சுவாமி, கெஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின், அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடுதல் முக்கிய நிகழ்வாக உள்ளதால், மடக்கில் தீபம் ஏற்றி கையில் ஏந்தியவாறு, சுவாமி சன்னதியில் வடக்கு பக்கம் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி வழிபட்டனர்.