Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓம் ரகசியம் தாய்க்கு நிகரான சித்தி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துணிந்து நில்! தொடர்ந்து செல்!! தோல்வி கிடையாது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
05:01

*துணிவுடன் நில்லுங்கள். முன்னேறிக் கொண்டே இருங்கள்! உங்களின் தற்போதைய நிலை குறித்த எண்ணம் சிறிதும் வேண்டாம். லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடமையில் ஈடுபடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
*முழுப்பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு பணியாற்றுங்கள். உங்களுக்கான விதியை வகுத்து  தொடர்
வெற்றிக்கு வழிவகுத்திடுங்கள்.
*உலகம் பெரிய உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை உள்ளவர்களாக ஆக்கவே மனிதர்களாக நாம் மண்ணில்  பிறந்திருக்கிறோம்.  
*அரிய செயல்கள் அனைத்தும் பெரிய இடையூறுகளை முறியடித்த பின்னரே சாத்தியமாகி இருக்கின்றன. அதனால் கடின உழைப்பும், விடாமுயற்சியும்  அவசியமானவை.
*எதை மண்ணில் விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய முடியும். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். செயலில் மட்டுமில்லாமல் மனதாலும் நல்லதை சிந்தியுங்கள்.
*முகத்தில் புன்னகையும், பேச்சில் இனிமையும் கொண்டிருங்கள். குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையோடு செயலாற்றுங்கள். அகந்தையை அறவே ஒழித்து விடுங்கள்.
*நீங்கள் நாய்க்கு ஒரு பிடி சோறு போட்டாலும், அந்த நாயைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள். கடவுளே உலகிலுள்ள எல்லா உயிர்களுமாக இருக்கிறார்.
*நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை மனதில் அடிக்கடி சிந்தியுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒளி பெற்றவராகத்
திகழ்வீர்கள்.
*தன்னம்பிக்கை மனிதனுக்கு மிக அடிப்படையானது. தன்னை நம்பாதவன் கடவுள் மீது பக்தி இல்லாத நாத்திகனைப் போன்றவன்.
*மனிதன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தவன். வலிமையுடைவன் என நினைத்தால் நிச்சயம் வலிமை படைத்தவனாகி விட முடியும்.
*நான் எதையும் சாதிக்க வல்லவன் என்ற மனஉறுதி ஒருவனுக்கு இருந்தால் அவனிடம் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.
*பிறருக்குச் செய்யும் எளிய சேவை கூட உங்களுக்கு பேராற்றலை உண்டாக்கும். நாளடைவில் உங்கள் மனம் சிங்கத்திற்கு நிகரான வலிமை பெற்று விடும்.
*தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள். மற்ற அனைவரும் வாழ்க்கையை வீணாக கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
*பாமர மனிதனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் உண்மையான நோக்கம்.
*உண்மை எங்கே அழைத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச்  செல்லுங்கள். கோழையாகவும், வேஷதாரியாகவும் இருந்து விடாதீர்கள்.
*அடக்கப்படாத மனம் மனிதனை கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பு அளிப்பதோடு சுதந்திரமாக வாழச் செய்கிறது. (©Põß Â÷ÁPõÚ¢uº)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar