Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையார் சுழிக்கு உ போடுவது ஏன்? வீரபத்திரர் விரதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துன்பங்களுக்கு காரணம் யார்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
05:01

உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. “ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே! கர்த்தாவே! நான் செய்த பாவங்கள் தான் என்ன?” இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள். “தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை  விபத்துக்களை அனுமதிக்கிறீர்கள்?” என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? “என்னை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,” என்பார். இது நிஜம் தானே! விதிகளை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! இதே போல், ஆண்டவருடைய சட்டப்புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். அவர் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்.

பொய் சொல்லாதே, களவு செய்யாதே, உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை...என்றெல்லாம் எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால், அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே! சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. இன்னின்ன காரியங்களைத் தவிர்த்தால், நீ சுகமாக இருக்கலாம் என்ற   கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! அழகான உலகத்தைக் கொடுத்த தேவன், அங்கே வாழும் முறையையும் கற்றுத் தந்துள்ளார்.
கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு மாறாக நடந்தால், வாங்கிய பொருள் எப்படி செயலிழக்குமோ அதுபோல், ஆண்டவரின் கட்டளைகளை மீறி நடக்கும்போது பிரச்னைகள் தலை துாக்குகிறது. ஒரு இன்டர்வியூவுக்குப் புறப்பட்டால், முதல்நாளே எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராகிறோம். ஆனால் சர்ச்சுக்குப் போக, எந்த ஆயத்தமும் செய்வதில்லையே! இப்படி இருந்தால் ஆத்துமாவுக்கும், ஆவிக்கும் எப்படி அமைதி கிடைக்கும்? ஆண்டவர் கொடுத்த சரீரத்தை, குடித்தும், புகைபிடித்தும் கெடுக்கிறோம். பின், கஷ்டம் வரத்தானே செய்யும்!  பைபிளில் ஒரு வசனம், “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமும் உள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெய்யால் ஆற்றப்படாமலும் உள்ளது” என்கிறது.  மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறோம் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. இனியேனும் செய்த பாவங்களை உணர்ந்து, ஆண்டவரிடம் பாவமன்னிப்பு பெற்று, நம்மை நாமே திருத்தி துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar