பக்தர்களுக்கு இருளில் ஒளிரும் குச்சிகள் தேவை:விபத்தில் சிக்குவதை தடுக்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2017 12:01
பழநி:தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக இருளில் ஒளிரும் குச்சிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழநி தைப்பூச விழாவிற்காக மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இரவு நேரத்தில் ரோட்டோரங்களில் நடந்துசெல்லும்போது, வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நடக்கிறது. தைப்பூச விழா 10 நாட்களுக்கு முன் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மஞ்சள், சிகப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட ஒளிரும் குச்சிகள் வழங்கப்படும். இது பழநி-திண்டுக்கல் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பழநிகோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து வழங்குவர்.
விபத்துகள் அதிகரிப்பு: தற்போதே பழநி-திண்டுக்கல் ரோட்டில் தினமும் நுாற்றுக்குமேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விபத்தில் சிக்கி இதுவரை 3 பக்தர்கள் உயிர் இழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் காலையில் மதுரையை சேர்ந்த இரண்டு பக்தர்கள் மீது சரக்குவேன் மோதி காயமடைந்தனர். இவ்வாறு தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. இனிவரும் பொங்கல் விடுமுறையில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் நலன் கருதி உடனடியாக இருளில் ஓளிரும் குச்சிகளை வழங்க பழநி கோயில் நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.