காஞ்சியருகே உள்ள பழைய சீவரத்தில் பொங்கல் திருநாளுக்கு மறுதினம் பாரிவேட்டை உற்சவம் நடைபெறும். அன்று ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதருடன் பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர், காவாந்தண்டலம் கரியமாணிக்கப் பெருமாள், சாலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒரு சேர வருவது கண்கொள்ளாக் காட்சி.