நவதிருப்பதிகளில் முதல் கோயில் ஸ்ரீவைகுண்டம். இக்கோயிலின் இறைவன் கள்ளப்பிரானுக்கு பொங்கலன்று 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பர். பெருமாள் கொடி மரத்தை வலம் வந்தபின் ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள். இது 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களையும் கண்ணபிரான் வடிவில் தரிசிப்பதாக ஐதிகம்.