பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்கு, 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகளும் இடம்பெற்றன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்றுமுன்தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.