பதிவு செய்த நாள்
12
ஜன
2017
12:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணிக்கு சிவகாமி அம்மன் திரு ஊஞ்சல் நிகழ்வும், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடராஜர் அபிேஷகமும் நடந்தன. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு மேல் மணிக்கு ஆருத்ரா தரிசன விழா இடம்பெற்றது. பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட தில்லைநாதர், பக்தர்களால் சுமக்கப்பட்டு, திருவீதியுலா சென்றார். பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்துக்கு பூஜை செய்து, புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபி ேஷகம், காலை, 6:00 மணிக்கு விசாலாட்சி அம்மனுடன் காசி விஸ்வநாதர் திருவலம் வந்து, பட்டி தரிசனம் தருதல், 6:30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 6:45 மணிக்கு மங்கல நாண் அணியும் நிகழ்வு நடந்தன. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.