பதிவு செய்த நாள்
13
ஜன
2017
12:01
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் ஜன12 நடந்தன. திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், ஜன12, வியாழக்கிழமையையொட்டி, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.